காத்தான்குடி பொதுமகன் யாழில் சடலமாக!

அச்சுவேலி நகரில் உள்ள சிகரம் பிளாசா கட்டடத் தொகுதியில் அறை ஒன்றில் வாடகைக்கு தங்கியிருந்தவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

அச்சுவேலி உணவகம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவரே இவ்வாறு இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

காத்தான்குடி அமானுல்லா வீதியைச் சேர்ந்த ஆதாம்பாவா முகம்மது றவுஸ் (வயது- 46) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இன்று காலை அவர் அறையிலிருந்து வெளியில் வராத நிலையில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

No comments