உடனடியாக முழுமையாக திறக்கவேண்டாம்!

 


நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை நீக்கும் முடிவை எடுக்கும்போது நாட்டை முழுமையாக திறக்க வேண்டாம் என்று சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.

சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளர் ஜெனரல் ஹேமந்த ஹேரத் நாட்டை முழுமையாக ஒரே நேரத்தில் திறக்க பரிந்துரைக்கப்படவில்லை என்றும் நாடு முழுமையாகத் திறக்கப்படுமானால், நிலைமை இன்னும் மோசமாகும் என்றும்  வலியுறுத்தினார்.

எனவே, படிப்படியாக நாட்டைத் திறப்பது மிகவும் பொருத்தமானது என்றும் இதனால் கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும் காரணிகள் உள்ளதா என்று நாம் பார்க்க முடியும் எனவும் அவர் மேலும் கூறினார்.

No comments