தேர்தல் சீர்திருத்தம்:கட்டியிருப்பதும் துலையும் கதை!

 


இலங்கையில் தேர்தல் சீர்திருத்த விவகாரத்தில், "விகிதாசார முறைமைமை விட்டுக்கொடுக்க முடியாது"  என்ற பொது நிலைப்பாட்டில் , தமிழ் முற்போக்கு கூட்டணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய தமிழ், முஸ்லிம் கட்சிகளும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒருமித்த நிலைப்பாட்டில் இருக்கின்றனவென நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். 

அதேNளை நான் இது பற்றி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,  ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மற்றும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகளுடனும் பேசியுள்ளேன். சுதந்திரக்கட்சி உடனும் ஏனைய அரசாங்க சிறு கட்சிகளுடனும் பேசியுள்ளேன். தவிர ஜேவிபி உடனும் பேசியுள்ளேன்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி, நண்பர்கள் அதாவுல்லா, வியாழேந்திரன், பிள்ளையான் ஆகியோர் தலைமையிலான கட்சிகளுடனும் பேச விரும்புகிறேன். 

இந்த  அனைத்து கட்சிகளும், அரசு, எதிரணி பேதங்களுக்கு அப்பால் நமது கட்சிகளின் இருப்புகளை உறுதிபடுத்த எம்முடன், "விகிதாசாரம் நிலைக்க" உடன்படுவார்கள் என நம்புகிறேன் எனவும் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.


No comments