முன்னணி,தமிழரசு தனிப்பிரிவும் மகஜர்!கூட்டமைப்பின் தலைமையை புறந்தள்ளி தமிழரசுக்கட்சியின் ஒரு சாரார் தனித்து மகஜரொன்றை அனுப்பியுள்ளமை உறுதியாகியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள்,உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என ஒன்பது பேரது ஒப்பத்துடன் மகஜர் ஜநாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.  

இதனிடையே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இருநாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படும் கடிதத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் சிறிலங்காவை பாரப்படுத்துவதே தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்கான ஒரே வழி என குறிப்பிடப்பட்டுள்ளது.

காணாமல் போனோருக்கான அலுவலகம் என்பது சிறிலங்கா அரசின் வெறும் ஏமாற்று தந்திரமே. தொடரும் அடக்குமுறைகளை கண்காணிக்க மனித உரிமை ஆணைக்குழு ஒரு விசேட தூதுவரை நியமிக்க வேண்டும். அத்தோடு , வடக்கு கிழக்கில் மனித உரிமை ஆணையக்கத்தின் ஒரு கள அலுவலக்ம் திறக்கப்பட்டு தொடரும் அடக்குமுறைகள் கண்காணிக்கப்பட வேண்மெனவும்     தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.


No comments