பாலியல் நேரஞ்சல்:கல்லாகட்டும் இலங்கை!

 


இலங்கை ஏற்கனவே சிறுவர் பாலியல் குற்றங்களின் மையமாகியிருக்கின்ற நிலையில் நேரடியாக பாலியல் துஸ்பிரயோகங்களை காட்சிப்படுத்துகின்ற செயற்பாடுகள் அம்பலமாகியுள்ளது.

தெற்கின் பலாங்கொடை பஹந்துடாவா எல்ல நீர்வீழ்ச்சியில் நிர்வாணமாக  பாலியல் செயற்பாடுகளை ஈடுபடும் போது, அவற்றை ஒளிப்பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டவர்களென சிலரைவ இலங்கை பொலிஸார் தேடி வலைவிரித்திருந்தனர்.

இந்நிலையில், அவ்வாறு பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு இருவரையும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சற்றுமுன்னர் கைது செய்துள்ளனர்.

மஹரகமையைச் சேர்ந்த 34 வயதான ஆணும், எல்பிட்டியைச் சேர்ந்த 25 வயதான பெண்ணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த குற்றப்புலனாய்வு பிரிவினர், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர். 

வெளிநாட்டு, உள்நாட்டு உல்லாச பயணிகள்   குடும்பங்களுடன் சென்று நீராடும் அந்த நீர்வீழ்ச்சிக்கு கீழிருக்கும் நீர் நிலையில் வைத்தே, நிர்வாணமாக பாலியலில் ஈடுபடும் காட்சிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளன.   


No comments