விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிக்க பிரித்தானியா தீர்மானம்!!


தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை தொடர்ந்து நீடிப்பதற்கு பிரித்தானியாவின் உள்துறை அமைச்சு தீர்மானித்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

பிரித்தானியாவில் 2000 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், மேன்முறையீட்டு ஆணைக்குழுவின் தீர்மானத்தின் பின்னர் பிரித்தானியாவின் உள்துறை அமைச்சின் செயலாளரினால் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஐரோப்பிய வலய நாடுகள் உள்ளிட்ட உலகளாவிய ரீதியில் 30 நாடுகளுக்கும் மேல் தமிழீழ விடுதலைபுலிகள் அமைப்பிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments