புதிதாக உருவாகியது 'மு' வகைக் கொரோனா!! தடுப்பூசிகளிலிருந்து தப்பித்துவிடும்!!


சீனாவின் உகான் மாகாணத்திலர் உருவாகி பரவத்தொடங்கிய கொரோனா தற்போது ஐந்தாவது முறையாக உருமாறியுள்ளது. உருமாறிய ஒரு வடிவம் பி.1.621 ஆகும். இது ‘மு’ என அழைக்கப்படுகிறது. இந்த புதிய வைரஸ் கொரோனா தடுப்பூசிகளில் இருந்து தப்பித்துக்கொள்ளும் அறிகுறிகள் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இந்த வைரஸ்  தென்னமரிக்காவில் அமைந்துள்ள கொலம்பியாவில் முதல் முதலில் காணப்பட்டுள்ளது. பின்னர் தென் அமெரிக்காவிலும், ஐரோப்பியாவிலும் குறிப்பிட்ட பகுதிகளில் பெரிய அளவில் வெளிப்பட்டுள்ளது. ‘மு’ வைரஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, ஹாங்காங்கிலும் பாதித்துள்ளது.

தற்போது இதன் பரவல் விகிதம் 0.1 சதவீதத்துக்கு குறைவாகவே இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் கொலம்பியாவில் 39 சதவீதமும், ஈக்குவடாரில் 13 சதவீதமும் உள்ளது. தொடர்ந்து அதிகரித்தும் வருகிறது. தற்பொது 39 நாடுகளில் காணப்படுகிறது என உலக சுகாதார அமைப்பு பட்டியலிட்டுள்ளது.

No comments