கொரோனா தொற்றினால் உயிரிழந்தால் சலுகை!கொரோனா தொற்று காலத்தில் பணியில் இருக்கும் போது ஒரு பொலிஸ் அதிகாரி இறந்தால், அவரின் பதவிக்காலம் முடியும் வரை முழு சம்பளத்தையும் அவரது குடும்ப உறுப்பினருக்கு வழங்குவதற்காக இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.

கொரோனா ஒழிக்கும் நடவடிக்கையை முன்னெடுக்கும் பணியில் இதுவரை 11ஆயிரத்து 700 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும், அவர்களில் 28 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

ஏற்கனவே இலங்கை படைகளிற்கு இத்தகைய சலுகைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 


No comments