தொடர்ந்தும் தடை?
வைத்தியர் சிவரூபன் உள்ளிட்டவர்களை உள்ளடக்கி இலங்கை அரசினால் அதிவிசேட வர்த்தமானி மூலம், தடைசெய்யப்பட்ட நபர்கள், குழுக்கள் மற்றும் அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
2026 ஜனவரி 6ஆம் திகதி வெளியான அதிவிசேட வர்த்தமானி பிரகாரம் முன்பு வெளியிடப்பட்ட பட்டியல் ரத்து செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக புதிய திருத்தப்பட்ட பட்டியல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட பட்டியல், 2025 மே மாதத்தில் இறுதியாக புதுப்பிக்கப்பட்டிருந்த பட்டியலை மாற்றுகிறது என்றும், வர்த்தமானி வெளியிடப்பட்ட உடனே உடனடியாக நடைமுறைக்கு வருகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் அரசாங்கத்தின் சார்பில் கையொப்பமிட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இதனுடன் தொடர்புடையதாக, திருத்தப்பட்ட பயங்கரவாத தடைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள நபர்கள் மற்றும் அமைப்புகளுக்குச் சொந்தமான அனைத்து நிதி, நிதி சொத்துகள் மற்றும் பொருளாதார வளங்களை முடங்க வைக்கும் உத்தரவும்; வெளியிடப்பட்டுள்ளது.

Post a Comment