கோத்தாவையும் விடமாட்டோம்!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச்வுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்குகளை அனுர அரசு மூடிமறைக்கவில்லையென பிரதமர் ஹரிணி தெரிவித்துள்ளார்.
இலஞ்ச ஊழல்கள் தொடர்புடைய 102 வழக்குகளில் 65 வழக்குகளை மீள தாக்கல் செய்துள்ளதுடன் இன்னும் 3 வழக்குகள் தொடடர்பில் ஆராய்ந்து வருகிறோம். இதனால் நாங்கள் யாரையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தெளிவாகும். பாரபட்சம் பார்த்து வழக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லையெனவும் இலங்கை பிரதமர் ஹரிணி தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ்வுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, அவர் ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு தினங்களில், அவருக்கிருந்த ஜனாதிபதி சிறப்புரிமை அடிப்படையில் மீளப்பெறப்பட்டது, தற்போது அவருக்கு அந்த சிறப்புரிமை இல்லை. அதனால் அந்த வழக்கை மீள தாக்கல் செய்ய முடியுமென எதிர்கட்சிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன.
அதேபோன்று முன்னாள் மத்தியவங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த கிரேக்க பிணைமுறி தொடர்பான வழக்கு அனுர அரசினால் மீளப்பெறப்பட்டுள்ளதாகவும் எதிர்கட்சிகள் விமர்சித்துள்ளன.
இந்நிலையில் நாம் எவரையும் பாதுகாப்பதாக இருந்தால், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கு விசாரணையை முன்னெடுத்துச் செல்ல மாட்டோம்.எவரையும் பாதுகாக்க எமது அரசாங்கம் கட்டுப்பட்டில்லை. அதற்கான அவசியமும் கிடையாது.நாம் யாரையும் பாதுகாக்கப்போவதில்லை” என்றும் இலங்கை பிரதமர் தெரிவித்துள்ளார்.

Post a Comment