தூதரக கதவில் சந்திரசேகரன்!
இந்திய தூதரகத்தின் பக்கமே சென்றிராக கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரக் கொழும்மை உயர்ஸ்தானிகர் சந்தோஸ் சாவை சந்தித்து சரணாகதியடைந்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி நன்னீர் மீன்வள ஆராய்ச்சி நிறுவன திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டத்தில் பங்கேற்ற 10 இலங்கை நன்னீர் பண்ணையாளர்களுடன் சந்திப்பில் அமைச்சர் தூதரகம் சென்றிருந்தார்.
இதனிடையே இந்திய கடற்றொழிலாளர்கள் தமது கடற்பரப்பை பயன்படுத்த எந்தச் சூழ் நிலையிலும் அனுமதியளிக்க முடியாது என கூறியுள்ள வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் முகமட் ஆலம், இவ்விடயம் குறித்து கடற்றொழில் அமைச்சர் அசமந்தமாக இருந்தால் அவருக்கெதிரான போராட்டம் விரைவில் முன்னெடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மன்னார் மற்றும் தீவகம் ஆகியவற்றின் கடற்றொழில் சமாசங்களின் பிரதிநிதிகள் பங்கேற்புடன் ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்த போதே அத்தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.
தமிழகம் காரைக்காலில் இருந்து வருகின்ற எல்லைதாண்டும் படகுகள் தொடர்பில் நாம் பல்வேறு இடையூறுகளை தொடர்ந்தும் சந்தித்து வருவதாக மீனவ அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே நெடுந்தீவு கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடியாகர்கள் 12 பேர் இரண்டு படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐகதான இந்திய மீனவர்கள் யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் ஊர்காவற்றுறை நீதிமன்றில் அவர்களை முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த வாரமும் 35 இந்திய மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் கைதாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment