துளி காணி கூட கிடைக்காது!



தையிட்டி விகாரைக்காக அடாத்தாக கையகப்படுத்தப்பட்ட காணிகளில் ஒரு துண்டு நிலத்தையும் , மீள காணி உரிமையாளர்களுக்கு கையளிக்க மாட்டேன் என விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரர் தெரிவித்துள்ளார் .பௌத்த சாசன அமைச்சின் பிரதிநிதிகள் , தையிட்டி விகாராதிபதி , அரச அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கொழும்பில் நேற்றைய தினம் புதன்கிழமை கூடி கலந்துரையாடிய போதே , விகாராதிபதி விகாரைக்கு என அறிக்கைப்படுத்தப்பட்ட காணியில் இருந்து சிறு துண்டு நிலத்தையும் விடுவிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

அதனால் கூட்டம் நீண்ட இழுபறியுடன் எவ்வித முடிவுகளும் எடுக்கப்படாமல் முடிவுற்றுள்ளது. தையிட்டி விகாரைக்கு என 19 பேரின் காணிகள் அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ளது. 

விகாரை பிரச்சினையை தீர்ப்பதற்காக அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள குழுவிடமும் தங்கள் காணி உறுதிகளை காணி உரிமையாளர்கள் வழங்கியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து மாவட்ட செயலர் , தெல்லிப்பழை பிரதேச செயலர் , தையிட்டி விகாராதிபதி ஆகியோரை கொழும்புக்கு அழைத்து கலந்துரையாடியதாக கூறப்படுகின்றது.

கலந்துரையாடலுக்கு சென்ற மாவட்ட செயலரோ , கலந்துரையாடலை நடத்தியவர்களோ , கூட்டத்தில் கலந்துரையாடிய விடயம் தொடர்பில் வெளியே தகவல்களை வெளியிட மறுத்தேவருகின்றனர்.


No comments