தீர்ப்பு : செப்டம்பர் 22?
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் வழக்கு தொடர்பான தீர்ப்பை கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் எதிர்வரும் செப்டம்பர் 22 ஆம் திகதி அறிவிக்கவுள்ளது
இதனிடையே 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறுத் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலேயை மேலும் 90 நாட்களுக்குத் தடுத்து வைத்து விசாரணை நடத்தக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அனுமதி பெற்றுள்ளது.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட சுரேஸ் சலே, அன்று முதல் தொடர்ச்சியாகக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார்.
இதனிடையே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர லெனின் பண்டார செப்டம்பர் 9ஆம் திகதி வரை தொடர்ந்தும்; விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரது பிணை வழங்கக் கோரிய மனு நிராகரிக்கப்பட்டதுடன், அவரை மேலும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுகீஸ்வர பண்டார கடந்த ஜூன் 18ஆம் திகதி மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டார்.
கோத்தபாய ராஜபக்சவை கைது செய்யும் முயற்சியின் ஒரு அங்கமாகவே கைதானவர்களது தடுப்புக்காவல் நீடிப்பினை அவதானிகள் கருதுகின்றனர்.

Post a Comment