கொரோனா:இணைய ஊடகவியலாளர் மரணம்!


யாழ்ப்பாணம் கச்சாய், கொடிகாமத்தைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் பிரகாஸ் எனும் இணைய ஊடகவியலாளர்  கொரோனா தொற்றினால் மரணித்துள்ளார். 

கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவதியுற்ற நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அனுமதிக்க சென்றிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

11 வயதில் இருந்து நோய் ஒன்றின் தாக்கத்தினால் தனது நடையை இழந்து சக்கரநாற்காலியில் வாழ்கையை கழித்தாலும், கட்டுரையாளனாக, இணையத்தள செய்தி ஆசிரியராக, செய்தி பதிவேற்றுநராக ஊடகவியலாளனாக பணியாற்றியிருந்தான்.

இன்னிலையில் இன்று வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்ட வேளை அவர் உயிரிழந்துள்ளார். 


No comments