இலங்கை:நாளொன்றிற்குஇருநூறை தாண்டியது!
இலங்கையில் அரைகுறை முடக்க நிலையினை அரசு அமுல்படுத்திவருகின்ற நிலையில் கொரோனா மரணங்கள் நாள் ஒன்றிற்கு இருநூறை தாண்டியுள்ளது.
நேற்றைய தினம் 209 உயிரிழப்புகள் ஏற்பட்டதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அந்தவகையில், கொரோனா பரவல் ஆரம்பித்ததிலிருந்து முதற் தடவையாக நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் தொடர்பிலான உயிரிழப்புகள் 200ஐத் தாண்டியுள்ளது.
இதேவேளை, இதனுடன் இலங்கையில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 8,000ஐத் தாண்டி, 8,157ஆக உயர்ந்துள்ளது.
நேற்று உயிரிழந்தவர்களில் 108 ஆண்களும், 101 பெண்களும் உள்ளடங்கியுள்ளனர்.அத்துடன் உயிரிழந்தவர்களில், எவரும் 30 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள் இல்லையென தெரியவந்துள்ளது.
அதேவேளை 30 தொடக்கம் 59 வயதுக்குட்பட்டோர் 46 பேரும், மிகுதியானோரில் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோர் 163 பேர் எனவும் தெரியவந்துள்ளது.
Post a Comment