இலங்கை:நீடிப்பதா? கைவிடுவதா? இன்று முடிவு!இலங்கையில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மேலும் நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பான இறுதி தீர்மானம் இன்று (27) அறிவிக்கப்படவுள்ளது.

அரச அமைச்சர்கள் முடக்கத்தை நீடிப்பது தொடர்பில் முரண்பட்ட கருத்துக்களை முன்வைத்துவருகின்றனர்.

எனினும் இன்று கூடவுள்ள கொவிட்19 ஒழிப்பு ஜனாதிபதி செயலணி, இது தொடர்பான தீர்மானத்தை அறிவிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

நாளாந்தம் பதிவாகும் தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் தரவுகளை ஆராய்ந்து, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும்.

No comments