தெற்கு பாதாள கும்பலின் புகலிடம் யாழ்ப்பாணமா?



இலங்கை நீதிமன்றில் பாதாள உலக கும்பலை சேர்ந்த நபர் ஒருவரை படுகொலை செய்ய உதவிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்திருந்த செவ்வந்தி எனும் பெண் நேபாளத்தில் கைதாகியுள்ளார்.

அதேவேளை யாழ்ப்பாணத்தில் செவ்வந்திக்கு உதவிய “ஜே.கே.பாய்” என்பவரும் நேபாளத்தில் அவருடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புhதாள உலக கும்பலைச்சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலையின் பின்னர் செவ்வந்தி நான்கு நாட்கள் மித்தெனிய மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்துள்ளார்.

பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவிற்கு சென்று அங்கு மூன்று கிழமைகள் தங்கியபின் நேபாளத்திற்கு தப்பிச் சென்றுள்ளார்.

இந்நிலையில், நாட்டில் இருந்து இந்தியாவுக்கு செல்வதற்காக செவ்வந்திக்கு ஜே.கே.பாய் என்பவர் உதவி செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனிடையே நேபாளத்தில் இருந்து செவ்வந்தியை ஜரோப்பிய நாடான்றிற்கு தப்பிக்க வைக்க முற்பட்டமையும் அம்பலமாகியுள்ளது.


No comments