உள்ளே: வெளியே - தெற்கில் சாதாரணம்!



தமிழ் இளைஞர்கள் கடத்திப்படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கைதாகியிருந்த முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் நிசாந்த உலுகேதென்னவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பின்னர் குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரை கடத்தி காணாமல் ஆக்கிய குற்றச்சாட்டின் பேரில் ஜூலை 28 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் முன்னாள் கடற்படைத் தளபதி கைது செய்யப்பட்ருந்தார்.

கடத்தல் விவகாரம் தொடர்பில், முன்னாள் கடற்படைத் தளபதியைத் தவிர, முன்னாள் புலனாய்வுத் தலைவர் ரியர் அட்மிரல் (ஓய்வு) சரத் மொஹோட்டி உட்பட மேலும் மூவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

வழக்கில் முன்னாள் கடற்படைத் தளபதி நிசாந்த உலுகேதென்ன 11வது சந்தேகநபர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சொந்தமானதாக கூறப்படும் கதிர்காமத்தில் மெனிக் கங்கைக்கு அருகில் உள்ள வீடு நீதிமன்றத்தால் நேற்று திங்கட்கிழமை  நீர்ப்பாசனத் துறையிடம் ஒப்படைக்கப்படடுள்ளது.

குற்றப் புலனாய்வுத் துறையால் வழக்குத் தாக்கல் செய்ததற்கமைய கட்டிடம் அரசாங்கத்திடம் வழங்கப்பட்டுள்ளது.


No comments