நிதி பிரச்சினை தீர்ந்து வெள்ளம்?



நிதி ஒதுக்கீடு இன்மையினை காரணங்காட்டி இழுத்தடிக்கப்பட்டு வந்த செம்மணி புதைகுழி அகழ்வுப்பணிகள் தற்போது வடக்கில் மழையுடனான வானிலை ஆரம்பமாகியுள்ள காரணத்தால் தாமதமடையலாமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அதனால் யாழ்ப்பாணம் - செம்மணி, மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் தாமதமாகக்கூடும் என யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தப்பட்டுள்ளது. 

சிந்துப்பாத்தி மனித புதைகுழி தொடர்பான வழக்கு நேற்று எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், நீதவான் செம்மணிக்கு ஆய்வு விஜயத்தை மேற்கொண்ருந்தார்.

அதன்போது செம்மணி மனித புதைகுழி காணப்படும் பகுதி மழை காரணமாக சதுப்பு நிலமாக மாறியுள்ளதை நீதவான் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.

இந்நிலையில், வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 03 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே நிதி ஒதுக்கீடு இன்மையினை காரணங்காட்டி அகழ்வுப்பணிகள் தாமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments