பொலீசாருக்கு ஒன்லைன் வகுப்புகள் :முறைப்பாட்டை பதிய முடியாது!
மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதிக்குள் நுழைந்த அத்துமீறிய நில ஆக்கிரமிப்பாளர்களால் மட்டக்களப்பு பண்ணையாளர்களின் கால்நடைகள் மீது மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
கடந்த 11 ம் திகதி நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் முத்துப்பிள்ளை வேந்தன் என்பவரின் பசு மாட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு குறித்த மாட்டினை இறைச்சிக்காக கொண்டு சென்றுள்ளனர்.
இது குறித்து முறைப்பாடு பதியச் சென்ற பண்ணையாளர்களை பொலீசாருக்கு ஒன்லைன் வகுப்புகள் நடைபெறுவதாக கூறி முறைப்பாட்டை பதிய முடியாது என திருப்பி அனுப்பி உள்ளனர்.
இன் நிலையில் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபு உள்ளிட்ட குழுவினர் மயிலத்தமடு மாதவனை பகுதியில் உள்ள பொலீஸ் பொறுப்பதிகாரியைச் சந்தித்து மேய்ச்சல் தரை நிலங்களில் அத்து மீறி காடழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நபர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கூறிய சில நாட்களிலேயே அங்குள்ள பண்ணையாளரின் மாடுகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டுள்ளது.
Post a Comment