ஆப்கானிஸ்தானிலிருந்து மக்களை வெளியேற்றுவது இன்றுடன் நிறுத்துகிறோம் - பிரான்ஸ்


ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் நாட்டு மக்களையும், தகுதியுள்ள ஆப்கான் மக்களையும் பத்திரமாக மீட்கும் பணி ஆகஸ்ட் 27 இன்று வெள்ளிக்கிழமை மாலையுடன் நிறுத்தப்படும் என்று பிரான்ஸ் அறிவித்துள்ளது. 

இதுகுறித்து பிரான்ஸ் பிரதமா் ஜீன் காஸ்டெக்ஸ் அளித்த செவ்வியில் தெரிவிக்கையில்:- 

இன்று வெள்ளிக்கிழமைக்குப் பிறகு காபூல் விமான நிலையத்திலிருந்து மக்களை வெளியேற்றும் பணியை எங்களால் தொடர இயலாது என்று தெரிவித்துள்ளார். 

பிரான்ஸ் அரசு கடந்த வாரம் முதல் ஆப்கானிஸ்தானில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுமார் 100 பேரும், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேரும் பிரான்ஸ் விமானப்படையால் ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

No comments