நாங்கள் மன்னிக்கவும் மாட்டோம்: மறக்கவும் மாட்டோம்!! நாங்கள் உங்களை வேட்டையாடுவோம்!!
ஆப்கானிஸ்தான் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புக்களில் 13 அமெரிக்கப் படையினர் உட்பட 60க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில் காபூலிலிருந்து அமெரிக்க விமானப் போக்குவரத்துகள் தொடரும் என அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கூறியுள்ளார்.
குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் அவர் கருத்துத் தெரிவிக்கையில்:-
நாங்கள் மன்னிக்க மாட்டோம். நாங்கள் மறக்க மாட்டோம். நாங்கள் உங்களை வேட்டையாடுவோம். இந்த செயலுக்கு பெரும் விலை கொடுக்க வேண்டும். காபூல் விமான நிலையத்திலிருந்து மக்களை வெளியேற்றும் பணியை நாங்கள் முடிக்க வேண்டும். நாங்கள் அதைச் தொடர்ந்து செய்வோம். நாங்கள் பயங்கரவாதிகளால் தடுக்கப்பட மாட்டோம் என்றார்.
உயிரிழந்த கடற்படையினர் மற்றவர்களின் உயிர்களைக் காக்க தன்னலமற்ற பணியில் இருந்த ஹீரோக்கள் என்று திரு பிடன் கூறினார்.
ஜெனரல் ஃபிராங்க் மெக்கென்சி, ஐசிஸ்-கே யின் அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதாகவும், அமெரிக்கப் படைகள் தலிபானுடன் இணைந்து மேலும் தாக்குதல்களைத் தடுக்க முயற்சிப்பதாகவும், தலிபான் ஏற்கனவே பலவற்றைத் தடுத்ததாகவும் கூறினார்.
ஆகஸ்ட் 15 அன்று தலிபான்களிடம் விழுந்த காபூலிலிருந்து 100,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். ஆனால் இன்னும் பல ஆப்கானியர்கள் அமெரிக்கப் படைகள் வெளியேறுவதற்கான 31 ஆகஸ்ட் காலக்கெடுவை முன்னிட்டு விமான நிலையத்திற்கு விரைந்து செயற்பட்டு வருகின்றனர்.
இன்றுவரை, ஆப்கானிஸ்தானில் இருந்து 104,000 பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் 66,000 பேர் அமெரிக்காவுககும் மற்றும் 37,000 பேர் பங்காளி நாடுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர்.
காபூல் விமான நிலையத்தில் தற்போது 5,800 அமெரிக்க துருப்புக்கள் உள்ளன மேலும் 1,000 இங்கிலாந்து துருப்புக்களும் உள்ளன.
விமான நிலையத்தில் சுமார் 5,000 பேர் காத்திருக்கிறார்கள் மேலும் பலர் இன்னும் சுற்றுச்சுவர் சோதனைச் சாவடிகள் வழியாக செல்ல முயற்சிக்கின்றனர்.
கனடா, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் டென்மார்க் உட்பட பல நாடுகள் ஏற்கனவே தங்கள் நடவடிக்கைகளை நிறுத்திவிட்டன.
ஆறு ஆண்டுகளாக விமான நிலையத்தில் பாதுகாப்பு அளித்து வந்த துருக்கி தனது படைகளை பின்வாங்குவதாக அறிவித்துள்ளது.
பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் விமானங்கள் மூலம் வெளியேற்றும் நடவடிக்கைகள் தொடரும் எனக் கூறினார்.
Post a Comment