ஆப்கானிஸ்தானில் 12 அமொிக்கப் படையினர் உட்பட 90 பேர் பலி!!


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையதில் நுழைவாசல் வெளிப்புறத்தில் நேற்று வியாழக்கிழமை இரண்டு சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தலில்  குறைந்தது 90 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 150 பேர் காயமடைந்தனர்.

கொல்லப்பட்டவர்களில் கடற்படை மருத்துவர் உட்பட 12 அமெரிக்கக் கடற்படையினர் உயரிழந்துள்ளனர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன்  அமெரிக்க சேவை பணியாளர்களும் அடங்குவதாக பென்டகன் உறுதிப்படுத்தியது.


இஸ்லாமிய அரச குழுவின் ஆப்கானிஸ்தான் கிளையான ஐ.எஸ்-கே (IS-K) யின் தாக்குதலின் உடனடி அச்சுறுத்தல் காரணமாக, மேற்கத்திய அரசாங்கங்கள் தங்கள் குடிமக்களை விமான நிலையத்திலிருந்து விலகி இருக்குமாறு எச்சரித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

குண்டு வெடிப்பானது உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு பரோன் உல்லாச விடுத்திக்கு அருகில், விமான நிலையத்தின் சுற்றுச்சுவருக்கு அருகில் முதலாவது குண்டு வெடித்தது.

இந்த விடுதியானது பிரித்தானிய அதிகாரிகளால் ஆப்கானியர்கள் இங்கிலாந்திற்கு பயணம் செய்ய விரும்புவதை செயலாக்க பயன்படுத்தப்பட்டது.


முதலாவது குண்டு வெடிப்பைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. பின்னர் விமான நிலையத்தின் முக்கிய நுழைவாயில்களில் ஒன்றான அபே கேட் அருகே  இரண்டாவது குண்டு வெடித்துள்ளது. 

இரண்டாவது குண்டு வெடித்தபோது  இருந்து கழிவுநீர் கால்வாய் அருகே இருந்த விமான நிலையத்திற்குள் செல்லக் காத்திருந்த  மக்களை  தண்ணீர் அடித்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.


தாக்குதலாளி ஒருவர் வெடிக்கும் ஆடையை அணிந்திருந்தாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

No comments