ஒன்றுக்குள் ஒன்றானோம்!

 



இன்று மாலை 3 மணியளவில் தமிழ்த்தேசியக் கட்சிகளான ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியினருடனும் , தமிழரசுக்கட்சியினருடனும் முன்னாள் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண அரசின் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் ஒரு கலந்துரையாடலை யாழ் டில்கோ ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்தக் கலந்துரையாடலானது மாகாணசபை தேர்தலை நடத்தக் கோரியும் மற்றும் முறையான முழுமையான அதிகாரப்பகிர்வு போன்ற விடையங்களை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி நடைபெற்றுவரும் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் பிரச்சார இயக்கத்தை இன்னும் பலமாக்குவதற்கான ஒரு ஏற்பாடாகவே அமைந்திருந்தது.

மற்றைய தமிழர் கட்சிகளையும் பல்வேறுபட்ட பொது அமைப்புகளையும் இணைத்து இந்த இயக்கத்தை  நடத்துவதி தனது பங்களிப்பு   மற்றும் அதற்கான தனது தரப்பு ஆலோசனைகளையும் வழங்குமுகமாகவே இந்தக் கலந்துரையாடலை ஏற்பாடு செய்ததாக வரதர் கூறினார்.

தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் சுமந்திரன் கலந்து கொள்வதாக இருந்தபோதும் தவிர்க்கமுடியாத காரணத்தால் அவர் கலந்து கொள்ளவில்லை. இருந்த  போதும் திட்டமிட்டபடி கூட்டம் நடந்தது. 

ஜனநாயகத் தமிழ்தேசியக்கூட்டணியின் தலைவர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சந்திரகுமார்,  வேந்தன் ஆகியோரோடு  முன்னாள் வடக்கு மாகாணசபையின் கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் ,மாகாணசபை உறுப்பினர் கஜதீபன் மற்றும் மாநகரசபை உறுப்பினரான ஈசன், இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கமலாகரன் ஆகியோரும் கட்சிகளின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். 

ஆரோக்கியமான பல கருத்துப் பரிமாற்றங்களோடு நடந்த கலந்துரையாடல் முடிவில்  பத்திரிகையாளர் சந்திப்பும் நடைபெற்றது.

No comments