அதிசயம்:30வருடங்களின் பின் வெளியேறினர்!
கடந்த 30வருடங்களிற்கு மேலாக இலங்கை காவல்துறை யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் ஆக்கிரமித்திருந்த தனியார் காணிகள் , வீடுகளை கைவிட்டு காவல்துறை வெளியேறியுள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது காணிகள் மற்றும் வீடுகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு, யாழ். மாவட்ட நீதிமன்றில் கடந்த 2019ஆம் ஆண்டு தமிழர்களான 07 காணி உரிமையாளர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
வழக்கு விசாரணைகள் கடந்த 06 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 27ஆம் திகதி தனியார் காணிகள் வீடுகளை உரிமையாளர்களிடம் மீள ஒப்படைத்து விட்டு, வெளியேற வேண்டும் என மாவட்ட நீதிபதி சி.சதீஸ்கரன் காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.
எனினும் இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் காவல்துறையினர் காணியை உரிமையாளர்களிடம் கையளிக்கமையால் இன்று (15) வீடுகள் அவற்றின் உரிமையாளர்களுக்கு நீதிமன்ற பதிவாளரினால் கையேற்கப்பட்டு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே காவல்துறை புதிய இடத்தில் தமது பணிகளை முன்னெடுக்கும் வரை கோப்பாய் பிரிவு மக்களது முறைப்பாடுகள் இருப்பின் அதனை யாழ்ப்பாணம் காவல் நிலையம் தற்காலிகமாக ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யுhழ்ப்பாணத்தில் இலங்கை காவல்துறையால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த கட்டடத்திலிருந்து நீதிமன்று தலையிட்டு வெளியேற்றியமை கவனத்தை ஈர்த்துள்ளது.
Post a Comment