தெற்கு கொலைகளை கோத்தாவே முன்னெடுத்தார்!



ஈஸ்டர் தாக்குதல் சதிகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய எந்நேரமும் கைதாகலாமென நம்பப்படுகின்றது.

இந்நிலையில் இறுதி யுத்த காலப்பகுதியில் தெற்கில் இடம்பெற்ற கடத்தல்களுக்கும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் தொடர்புகள் உள்ளதாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு யுத்தத்தின் போது அப்போதைய பாதுகாப்பு செயலாளராக செயல்பட்ட கோட்டாபய ராஜபக்சவின் கீழ் இயங்கிய உத்தியோகபூர்வமற்ற ஒரு குழுவே தெற்கில் இடம்பெற்ற பிரகீத் எக்னலிகொட மற்றும் லசந்த விக்ரமதுங்க ஆகியோரின் கடத்தல்களை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

சுரேஸ் சாலே, கபில கெந்த விதாரண உள்ளிட்ட ஓய்வு பெற்ற புலனாய்வு அதிகாரிகள் உத்தியோகபூர்வமற்ற குழுவில் உள்ளடங்குவதாகவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் போது வடக்கு, கிழக்கு பகுதிகளின் பாதுகாப்பு தனது முழு கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததாகவும், தெற்கின் பாதுகாப்பானது கோட்டாபயவின் கட்டுப்பாட்டில் இருந்தது.

எங்களுடைய அமைப்பில் அப்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த புலனாய்வு அதிகாரிகள் எவரும் கடத்தல்களில் ஈடுபடவில்லை.

தெற்கின் புலனாய்வு நடவடிக்கைகள் தனியாக கோட்டாபய ராஜபக்சவின் தலைமையில் இடம்பெற்றன. கோட்டாயவுக்கு தனிப்பட்ட ரீதியில் செயற்பட்ட ஓய்வு பெற்ற புலனாய்வு அதிகாரிகளே இந்த கடத்தல்களுக்கு உடந்தையாக இருந்ததாகவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். 


No comments