சிசுவை எரித்துக் கொன்ற 3 பிள்ளைகளின் தாய்!!


தான் பிரசவித்த சிசுவை, கொன்று அதனை எரித்த 3 பிள்ளைகளின் தாயொருவர் கந்தளாய் பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று (12) மாலை இச்சிசுவை குறித்த தாய் பிரசவித்துள்ளதுடன், அச்சிசுவை எரித்து, வீட்டுத்தோட்டத்தில் புதைத்துள்ளா​ர் என்றும் தெரியவந்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, சந்தேகநபரான தாய் கைதுசெய்யப்பட்டா​ர் என்றும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 35 வயதானவர் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த பெண்ணின் கடந்த 4 வருடங்களாக வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments