படையினருக்கு புரோக்கர்களாக அதிகாரிகள்?பாதிக்கப்பட்ட தமிழ் மக்களது வறுமையினை பயன்படுத்தி படையினருக்கு தரகு வேலை பார்ப்பது அரசியல்வாதிகளது பணியாக இருந்து வந்திருந்த நிலையில் தற்போது அது அரச அதிகாரிகளது பணியாகியுள்ளது.

அவ்வகையில் கரைச்சி பிரதேச செயலாளர் பாலசுந்தரம் ஜெயகரன் தனது தரகர் பணியை ஆரம்பித்துள்ளார்.

வன்னியில் படையினரின் உதவியுடன் வீடுகளை அமைத்து கொடுக்க தான் கோரிக்கை ஒன்றை முன்வைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைத்துள்ள  6 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டை கட்ட முடியாத குடும்பங்களுக்கு படையினரின் உதவியை வழங்க வேண்டுகிறேன் என, பாலசுந்தரம் ஜெயகரன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பிரதேச செயலாளரின் கோரிக்கையை ஏற்பதாகத் தெரிவித்த கிளிநொச்சி இராணுவ தலைமைக் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் எச்.பி.ரணசிங்க, 57ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியுடன் தொடர்பு கொண்டு அவ்வாறான குடும்பங்களை அடையாளம் காட்டுமாறும்  பிரதேச செயலாளரிடம் தெரிவித்துள்ளார்.

இத்தகைய நடவடிக்கைகள் மூலம் படையினரது இருப்பை தக்க வைக்கும் முயற்சிகளை அரசு  நியாயப்படுத்திவருவது குறிப்பிடத்தக்கது.


No comments