வரவிற்காக காத்திருந்த மற்றொரு தாயும் பிரிந்தார்!கோத்தபாயவின் பணிப்பில் 2005 ம் ஆண்டு கொழும்பு வெள்ளவத்தையில் வைத்து சிறீலங்கா இராணுவ புலனாய்வாளர்களால்  கடத்தப்பட்ட தனது மூத்த மகனை கடந்த 16 வருடங்களாக தேடியலைந்த ஒரு தாய் தனது தேடலை நேற்றுடன் முடித்துக்கொண்டு விழி மூடி விடைபெற்றுச் சென்றுள்ளார்.

என்றாவது ஒரு நாள் தன் மகன் திரும்பி வருவான் என்ற நம்பிகையோடு வாழ்ந்த தாய் அந்த நம்பிக்கை நிறைவேறாத நிலையில் தற்போது விழி மூடி மீளா உறக்கத்துக்கு சென்றுவிட்டார்.

தனது வாழ்வின் பெரும்பகுதியை  துன்பத்திலேயே கழித்த அந்த தாய்க்கு தமிழ் தேசம் தனது அஞ்சலிகளை செலுத்திவருகின்றது.


No comments