வடக்கு ஆளுநரை ராஜினாமா செய்ய சொன்னாரா பஸில்?எதிர்வரும் டிசெம்பர் வரை கால அவகாசமொன்றை தற்போதைய வடக்கு ஆளுநர் சாள்ஸ் பஸிலிடம் முன்வைத்த போதும் அதனை அவர் நிராகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

வடமாகாண சபையின் பிரதம செயலாளராக இருந்த பத்திநாதரிற்கு வருட இறுதி வரை கால நீடிப்பையும் அது வரை தானும்  பதவியில் தொடர வடக்கு ஆளுநர் சாள்ஸ் கோரியிருந்ததாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இளம் சமூகத்தினை களமிறக்கி தமது கட்சிக்கு புத்துயிர் ஊட்ட முற்பட்டுள்ள பஸில் அதனை நிராகரித்து வடக்கு ஆளுநரையும் ராஜினாமா செய்ய கோரியதாக தெரியவருகின்றது.

முன்னதாக வடக்கு ஆளுநரால் கொழும்பிற்கு பந்தாடப்பட்ட தெய்வேந்திரன்; என்பவர் பிரதம செயலாளராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments