தெற்கிற்கு இராணுவ ஆட்சி தெரிகிறதாம்? இராணுவ ஆட்சியின்   ஊடாக  சிவில் நிர்வாகத்தை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது.   இலவச கல்விக்கு எதிராக  அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும்  என வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பதாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் மகஜரும் கையளிக்கப்பட்டது.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள  இலங்கை ஆசிரிய சங்கத்தின் தலைவர் ஜோஸப் ஸ்டாலின் உள்ளிட்ட சிலில் அமைப்பினரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி  17 தொழிற்சங்கத்தினர்  இன்று வெள்ளிக்கிழமை  ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக எதிர்ப்பு போராட்டத்தில்  ஈடுப்பட்டார்கள். 

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் ஆசிரியர்கள் எதிர்க் கொண்டுள்ள  பிரச்சினைகளுக்கு அரசாங்கம் விரைவில் தீர்வை பெற்றுத் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி  போராட்டகாரர்கள் ஜனாதிபதி செயலாளரிடம் மகஜர் ஒன்றை கையளித்தார்கள்.

No comments