முன்னணி இந்திய புகைப்படவியலாளர் பலி!

 
இந்தியாவில் நிலவிய கொரோனாவின் கோர முகத்தை புகைப்படங்கள் மூலமாக உலகறியச் செய்த ராய்ட்டர்ஸ் புகைப்பட நிருபர் தானிஸ் சித்திக் குண்டுவெடிப்பில் ஆப்கானில் காலமானார்.

புகைப்பட நிருபர் தானிஸ் சித்திக் கந்தகாரில் நிலவி வரும் மோதலை படம்பிடிக்கச் சென்றபோது கொல்லப்பட்டார் என கூறப்பட்டுள்ளது.

தன் ஒளிப்படங்கள் வழியே இந்தியாவை சர்வதேச அளவில் வெளிக் கொண்டு வந்தவர் தானிஸ் சித்திக். புலிட்சர் பரிசு பெற்ற சித்திக்கின் படங்களை காணாமல்  எவரும் கடந்து சென்றிருக்கவே முடியாது.

அவர்  ரோஹிங்கியா முஸ்லீம்களின் இடப்பெயர்வு தொடர்பாக எடுத்த படங்கள் உலகை பெருமளவு உலுக்கியது. கொரோனா மரணங்கள் தொடர்பாக  பரிதாபகரமான டெல்லியின் டாப் ஆங்கிள் படங்களை முதன் முதலாக வெளியிட்டது தானிஸஷ் சித்திக்தான். போலித்தனங்களால் மின்னாத மேடைக்குப் பின்னால் நடப்பவற்றை அலரது கேமிராக்கள் தேடின. இதோ ஆப்கான் தலிபான்கள் கைகளுளுக்குச் செல்கிறது.ராய்ட்டர்ஸ் ஊழியராக அங்கே சென்றவர் தாக்குதலுக்குள் சிக்கியிருக்கிறார். தலிபான்கள் நடத்திய தாக்குதலில் நம் சமகாலத்தில் வாழ்ந்த மிகச்சிறந்த கலைஞர் தானிஸ் சித்திக் மரணமடைந்துள்ளார்.


No comments