கணவனுடன் கோவிலுக்குச் சென்ற மனைவியும் வழியில் மரணம்!!


யாழ்ப்பாணத்தில், இன்று (28), தனது கணவருடன் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்த மனைவி  , மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் - வேலணை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணே, இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

சுன்னாகத்தில் உள்ள கோவில் ஒன்றுக்கு, தனது கணவனுடன் ஓட்டோவில் பயணித்துக் கொண்டிருந்த போது,  , திடீரென மயக்கமுற்றுள்ளார்.

இதையடுத்த, அவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டார் என, வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.

சடலம் பிரதே பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

No comments