கிளிநொச்சியில் விபத்து! காவல்துறை உத்தியோகத்தர் பலி!


கிளிநொச்சியில் இன்று (27) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

கரடி போக்கு சந்தியில் இருந்து பெரிய பரந்தன் ஊடாக பூநகரி வீதிக்குச் செல்லும் வழியில் 5 ஆம் வாய்க்கால் பகுதியில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

வேகக் கட்டுப்பாட்டை இழந்த உந்துருறுளி வாய்க்காலுக்குள் வீழந்ததன் காரணமாக காவல்துறை உத்தியோகத்தர் பலியாகியுள்ளார்.

சடலம் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்திசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments