போட்டோவா முண்டியடித்த சுமா சேர்!

 


சுத்தமான நகரமொன்று - சூழல் நட்புறவான நாடொன்று" எனும் கொள்கைத்திட்டத்தின்கீழ், சேதன குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் வகையில் முள்ளி, கரவெட்டியில் நிர்மாணிக்கப்பட்ட பொறிமுறைச் சேதனபசளை தயாரிப்பு நிலையம், இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.

யப்பானின் நிதி உதவியில் கட்டக்கப்பட்ட கட்டடத்தை திறக்க கட்சி பேதமின்றி தமிழ் அரசியல்வாதிகள் முண்டியிட்டமை நையாண்டியாகியுள்ளது.

அங்கயன் இராமநாதன் தலைப்பாகை கட்டிய நிகழ்வென்பதால் டக்ளஸ் கண்டுகொள்ளாது விட நாமல் ராஜபக்சவோடு,அங்கஜன் இராமநாதன் ,ஈபிடிபி.சுதந்திரக்கட்சி பிரதிநிதிகள்.பொதுஜனபெரமுன தலைவர்களுடன் கூட்டமைப்பின் தலைவர்களும் முண்டியடித்ததே நையாண்டியாகியுள்ளது.முன்வரிசையில் ரிபன் வெட்ட சுமந்திரன் முண்டியடிக்க ஆனந்தசுதாகரனது பிள்ளைகளை வைத்து முன்னெடுக்கப்பட்ட பிச்சையெடுப்பை பரிதாபகரமாக வேடிக்கை பார்த்துள்ளார் சித்தார்த்தன்.

இதனிடையே யாழ்ப்பாணம் பலாலி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் அமைக்கப்பட்ட வகுப்பறைக்கட்டடத்தை, மாணவர்கள் எவருமேயின்றி அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ச திறந்து வைத்த பரிதாபமும் நடந்துள்ளது. 

No comments