யானைக்குட்டிகளை கடத்துவதில் இலங்கை இராணுவம்!இலங்கை காடுகளில் யானைக்குட்டிகளை களவாக வேட்டையாட முற்பட்ட இராணுவத்தினரை தடுக்க முற்பட்ட வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளை மிரட்டியுள்ளனர்.

மின்னேரியா ஹபரானா தேசிய பூங்காவில் குடடி யானைகளை திருடும் திட்டத்தை கவனித்துக்கொண்டிருந்தபோது கடமையில் இருந்த வனவிலங்கு அதிகாரிகள் குழுவே தாக்கப்பட்டுள்ளதுடன் கொலை அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டுள்ளது.

மின்னேரியா தேசிய பூங்காவில் இருந்து ஒரு குட்டி யானையை கடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கையில் ஒரு பெரிய யானை கடத்தல்காரன் உட்பட ஒரு குழு ஹபரானாவைச் சுற்றியுள்ள பல ஹோட்டல்களில் பல நாட்களாக இருந்து வருகிறமை பற்றி வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளிற்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இரண்டு இராணுவ வாகனங்களில்  யானைக்குட்டியை கடத்த முயற்சி நடந்துள்ளது.அவ்வாகனம் இலங்கை இராணுவத்தின் ஒரு ஜெனரலால் ஓட்டப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

காட்டிற்குள் புகுந்த வாகனங்களை வனவிலங்கு அதிகாரிகள் துருத்திய போது தப்பித்து அனுராதபுரத்தில் உள்ள இராணுவ முகாமில் வாகனங்கள் நுழைந்துள்ளன.

முன்னதாக படை அதிகாரிகள் வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளை தாக்கியதுடன் கைத்தொலைபேசிகளையும் பறித்துள்ளனர்.

அரச உயர்மட்டத்தை சேர்ந்தவர்களிற்கே யானை குட்டியை திருட திட்டமிட்டிருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது.  


No comments