குப்பை கொட்டுமிடத்திலும் சிங்களத்திற்கு முன்னுரிமை!தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் யாழ்ப்பாணத்தில் அதிலும் வடமராட்சியில் குப்பை கொட்டுமிடத்திற்கு பெயரிடுவதில் சிங்களத்திற்கே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு தமிழர் தாயத்தில் தமிழ் மொழிக்கே முன்னுரிமை வழங்கப்படவேண்டுமென்ற போதிலும் அண்மைக்காலமாக சிங்களமே முதன்மையாகின்றது.

அதனை நக்கிவாழும் அரசியல் செய்யும் தமிழ் அரசியலாளர்களும் கண்டுகொள்வதில்லை.

வெறுமனே சமூக ஊடகங்களில் வீரம் பேசும் இத்தகைய தரப்புக்கள் சிங்கள ஆளும்வர்க்கம் கோபம் கொண்டுவிடுமென மௌனித்து நல்லபிள்ளை பெயர் எடுப்பது வழமையாகும்.

இந்நிலையில் அதுவும் இலங்கை அரச நிதி ஏதுமின்றி யப்பானிய நிதியில் முன்னெடுக்கப்பட்ட திட்ட பெயர் பலகையில் சிங்களத்திற்கு முதலிடம் கொடுத்து அழகு பார்த்துள்ள எம்.ஏ.சுமந்திரனின் எடுபிடி வசமுள்ள கரவெட்டி பிரதேசசபை இது பற்றி வாயn திறக்க மறுத்துவருகின்றது. 
No comments