நெல்லியடி காவல்துறை அதிகாரிக்கு கொரோனா!

 


நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இன்று முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது 

இதனிடையே கண்டி பேராதனை முருத்தலாவவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தமை குறித்து விசாரணை நடத்துமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.

எதிர்காலத்தில் இதுபோன்ற இறப்புகளைத் தடுக்க, இந்த துரதிரஸ்டவசமான சம்பவம் குறித்து சுகாதார பிரிவுகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

71 வயதான தந்தை ஜூன் 2ஆம் திகதி உயிரிழந்தார். 68 வயதான தாய் ஜூன் 17ஆம் திகதி உயிரிழந்தார். இவர்களது 39 வயது மகன் ஜூன் 23ஆம் திகதி உயிரிழந்தார். மூவரும் கோவிட் -19 காரணமாக உயிரிழந்தனர் என்று சுகாதாரத் துறையினால் அறிக்கையிடப்பட்டுள்ளது.


No comments