பூநகரி:பண்ணைக்கு கள்ள உறுதியாம்?பூநகரி கௌதாரி முனையில் சட்டவிரோதமாக செயற்பட்டுவரும் சீன பின்னணி கடலட்டை வளர்ப்பு பண்ணையை பதிவு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

பூநகரி கௌதாரிமுனையில்  கடலட்டைப் பண்ணை வைத்து நடாத்தும் சீன பிரஜை வைத்துள்ள ஆவணத்தில் பூநகரியை சேர்ந்த கூட்டுறவு அமைப்பு தன்னுடைய பண்ணையினை குத்தகைக்கு கொடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் மீன்பிடி கூட்டுறவு அமைப்பினை சேர்ந்த சிலரே இதன் பின்னணியிலிருந்தமையும் தெரியவந்துள்ளது.

இந்நிலையிலேயே பூநகரி கௌதாரிமுனை கடலட்டை பண்ணையை அனுமதி பெற்ற பண்ணையாக காண்பிக்க முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.  


No comments