யேர்மனியில் ஆயுததாரியின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி!!


யேர்மனியில் நேற்று வியாழக்கிழமை ஆயுத தாரி ஒருவரால் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சுட்டுக்கொல்லபட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய ஆயுததாரியை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

நோட் ரைன்-வெஸ்ட்பாலியாவில் உள்ள பீல்ஃபெல்ட் நகரத்திற்கு அருகிலுள்ள எஸ்பெல்காம்ப் நகரத்தின் மையத்தில் இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இம்பெற்றிருந்தது.

இறந்தவர்களில் ஒருவர் வீட்டிற்குள் கொல்லப்பட்டார், மற்றவர் அதற்கு வெளியே கொல்லப்பட்டார் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறப்பு போலீஸ் கமாண்டோக்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டிருந்தது.

இறந்தவரில் ஒருவருக்கு (ஆண்) 48 வயது எனக் கூறப்பட்டுள்ளது. மற்றவர் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளது. அவர் பெண் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரான துப்பாக்கிதாரிக்கு 52 வயது இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

பிரபல ஜெர்மன் பத்திரிகை பில்ட் பெயரிடப்படாத ஆதாரங்களை மேற்கோள் காட்டி, துப்பாக்கிதாரியைச் சரணடையச் செய்ய காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளது.

No comments