உலகின் 3வது பொிய வைரம் கண்டுபிடிப்பு!!

 


உலகின் மிகப்பெரிய வைரங்களில் ஒன்று போட்ஸ்வானாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இது உலகின் மூன்றாவது பொிய வைரமாகும். இந்த வைரம் 1,098 காரட் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்டுபிடிக்க்பபட்ட  வைரக் கல் போட்ஸ்வானா அதிபர் மொக்வீட்ஸி மாசிசிடம் நேற்று முன்தினம் புதன்கிழமை கையளிக்கபட்டுள்ளது.

நாட்டின் தலைநகரான கபோரோனில் இருந்து 75 மைல் தொலைவில் உள்ள ஜ்வெனெங் சுரங்கத்தில் இந்த மாத தொடக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சுரங்கத்தை போட்ஸ்வானாவின் அரசாங்கமும் டி பியர்ஸ் குழுமமும் இணைந்து வைத்திருக்கும் வைர நிறுவனமான டெப்ஸ்வானா தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி தெரிவித்துள்ளது.


அதிகாரப்பூர்வ அரசாங்க ட்விட்டர் கணக்கு வைரத்திலிருந்து கிடைக்கும் வருமானம் நாட்டில் தேசிய வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு பயன்படுத்தப்படும் என்று எழுதியது. 

உலகிலேயே மிகப்பெரிய வைரம் 1905-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வைரம் 3,106 காரட் அளவு கொண்டதாகும்.

அதற்கு அடுத்தபடியாக, இரண்டாவது மிகப்பெரிய வைரம் போட்ஸ்வானா நாட்டில் 2017-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வைரம் 1,109 காரட் அளவு ஆகும்.

No comments