கொடிகாமம் முடக்கம்!வடக்கில் மீண்டும் கொரோனா தொற்று வேகமடைய தொடங்கியுள்ள நிலையில்  கொடிகாமம் சந்தை மற்றும் கடை வியாபாரிகள் 30 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூட பரிசோதனையில் 21பேருக்கும், யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 09 பேருக்கும் கொரோனா தொற்று கண்டயறிப்பட்டுள்ளது.

ஏற்கனவே கொடிகாமம் பொதுச்சந்தையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு சந்தை மூடி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் மேற்கொள்ளப்பட்ட எழுமாற்று பரிசோதனையில் தற்போது 30பேர் தொற்றாளர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக கொடிகாமம் மத்தி மற்றும் கொடிகாமம் வடக்கு கிராமசேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்படுவதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கில் இன்று 43 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர். யாழில் 37 பேரும் , கிளிநொச்சியில்  03பேரும் , வவுனியா 03பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


No comments