ரிசாட் பதியுதீனும் அவரது சகோதரரும் கைது!!


நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகிய இருவரும் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்ப்பட்டுள்ளனர்.

ரிசாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகிய இருவரும் கொழும்பிலுள்ள அவர்களது வீட்டில் வைத்து இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறுதினத்தன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டின்  அடிப்படையிலேயே இக்கைது  நடந்துள்ளது.

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ரிஷாட் பதியுதீன் எம்பி மற்றும் அவரது சகோதர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய சிஐடிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

No comments