இரவிரவாக முள்ளிவாய்க்கால் தூபி வேலை!

 



நாளைய தினம் வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்டு திறக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி வேலைகள் இரவிரவாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. 


யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி பல்கலைக்கழக நிர்வாகத்தினால் கடந்த ஜனவரி 8ஆம் திகதி இடித்து அழிக்கப்பட்டது.

எனினும் அதனைக் கண்டித்து எழுந்த மக்கள் எழுச்சியாலும் மாணவர்களின் போராட்டங்களினாலும் இருந்த இடத்திலேயே முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைக்க பல்கலைக்கழக நிர்வாகம் இணக்கம் தெரிவித்தது. 



அதனை அடுத்து பல்கலைக்கழக துணைவேந்தரினால் அடிக்கல்லும் நட்டுவைக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எனக் குறிப்பிடப்பட்ட பதாகை காட்சிப்படுத்தப்பட்டு நினைவுத் தூபியை மீள அமைக்கும் பணிகள் மாணவர்களின் பங்களிப்புடன் ஜனவரி 15ஆம் திகதி ஆரம்பமானது.

இந்நிலையில் அதன் கட்டுமான பணிகள் நிறைவிற்கு வந்துள்ள நிலையில் , நாளைய தினம் (23) அதனை திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

திட்டமிட்டபடி தூபி நாளை திறந்து வைக்கப்படுமென மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ள நிலையில் இரவிரவாக வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


No comments