சுவிசில் பொதுமக்கள் வாக்களிப்பு! புர்கா அல்லது நிகாப் அணிவதற்கு தடை!


முஸ்லீம் பெண்கள் அணியும் புர்கா அல்லது நிகாப் உள்ளிட்ட முகமூடிகளை பொதுவில் தடை செய்வதற்கு ஆதரவாக சுவிட்சர்லாந்து சுவிற்சர்லாந்து மக்கள் வாக்களித்துள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை பொது வாக்கெடுப்பில் 51.2 வீதமான மக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர் என அதிகாரப்பூர்வ முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த திட்டத்தை வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சி (எஸ்விபி) முன்வைத்தது. "தீவிரவாதத்தை நிறுத்து" போன்ற முழக்கங்களுடன் பிரச்சாரம் செய்திருந்தது.

ஒரு முன்னணி சுவிஸ் இஸ்லாமிய குழு இது முஸ்லிம்களுக்கு "ஒரு இருண்ட நாள்" என்று கூறியது.

லூசெர்ன் பல்கலைக்கழகத்தின் (ஜெர்மன் மொழியில்) ஆராய்ச்சியின் படி, சுவிட்சர்லாந்தில் யாரும் புர்கா அணியவில்லை, சுமார் 30 பெண்கள் மட்டுமே நிகாப் அணியிறார்கள். 8.6 மில்லியன் மக்கள் தொகை கொண்ட சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையில் சுமார் 5% முஸ்லிம்கள், பெரும்பாலானவர்கள் துருக்கி, போஸ்னியா மற்றும் கொசோவோவிலிருந்து வந்தவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளது.

No comments