உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்தார் பிரெஞ்சு எம்.பி.யும் கோடீஸ்வரருமான ஆலிவர் டசால்ட்


பிரஞ்சு நாடாளுமன்ற உறுப்பினரும் கோடீஸ்வரருமான ஆலிவர் டசால்ட் உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரான்சின் வடமேற்கு எல்லையில் அமைந்துள்ள நோர்மன்டியில் இவ்விபத்து இடம்பெற்றிருந்தது.

டசால்ட் தொழிலதிபர் செர்ஜ் டசால்ட்டின் மகன் ஆவார். அக் குழுமம்  ரஃபேல் போர் விமானங்களை உற்பத்தி செய்வது மற்றும் பிகாரோ செய்தித்தாளையும் வைத்திருக்கிறது.

உலகின் 361 வது பணக்காரரதன டசாலட் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆலிவர் டசால்ட் பிரான்ஸை நேசித்தார். தொழில்துறையின் கப்டன், நாடாளுமன்ற உறுப்பினர், உள்ளூர் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரி, விமானப்படையில் ரிசர்வ் கமாண்டர் என பல்முகத் தன்மை கொண்டவர் டசால்ட் அவரது வாழ்நாளில ஒருபோதும் நாட்டுக்கு சேவை செய்வதை நிறுத்தவில்லை குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments