சாணக்கியனை தேடிச்சென்ற மாவை!


யாழ்ப்பாணம் வந்த போது தமிழரசு தலைவர் மாவையை சந்திக்காது சாணக்கியன் காய்வெட்டியிருந்த நிலையில் களுவாஞ்சிக்குடியிலுள்ள அவரது காரியாலயத்திற்கு தேடி சென்று சந்தித்துள்ளார் மாவை. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா , கட்சியின் செயலாளர் பத்மநாதன் சத்தியலிங்கம் சகிதம் சாணக்கியனின் அலுவலகத்திற்கு பயணித்திருந்த நிலையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக பல விடயங்களை கலந்தாலோசித்தோம். அத்துடன் சில ஊடகங்களில் வரும் உண்மைக்கு புறம்பான மக்களை குழப்பும் திசை திருப்பும் விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடல் இடம்பெற்றதாக சாணக்கியன் விளக்கமளித்துள்ளார்.


No comments