நெடுந்தீவு கள்ளுடன் ஜக்கியமான கனேடிய தூதர்!வடகிழக்கு மக்களின் அவலங்களை தரிசிக்க வருவதாக சொல்லிக்கொள்ளும் ராஜதந்திரிகள் இன்னொருபுறம் தங்கள் சுற்றுலாவையும் கைவிடுவதில்லை.

இந்நிலையில் கடும் வெப்பத்தை தணிக்க நெடுந்தீவு கள்ளு அருந்திய

கனேடியத் தூதுவர் மக்கினன் அதனை மகிழ்வுடன் பகிர்ந்துமுள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்த கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினன் நேற்று நெடுந்தீவுக்குச் சென்று அங்குள்ள புராதன சின்னங்களைப் பார்வையிட்டுள்ளார். 

அத்துடன், கடும் சூட்டைத் தணிக்கும் வகையில், கள் அருந்தியதாகவும் அவரது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மிக அழகானதும் அற்புதமான தீவு நெடுந்தீவு என்றும் பார்வையிடக் சந்தர்ப்பம் கிடைத்தமை அருமையானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments