முருங்கை மரமேறும் இலங்கை இராணுவம்!



இலங்கை இராணுவத்தை மீண்டும் பொதுமக்கள் மத்தியில் நடமாட கோத்தா அரசு அனுமதித்துள்ள நிலையில் இராணுவச் சிப்பாய் தாக்கியதாகத் தெரிவித்து இளைஞர் ஒருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உடுவில் ஆலடியைச் சேர்ந்த சிவலிங்கம் கமில்தாஸ் (வயது-22) என்ற இளைஞரே இவ்வாறு சிகிச்சைக்காக தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இராணுவத்தினர் தன்னை வழிமறித்துத் தாக்கியதாக இளைஞர் வைத்தியசாலையில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த வாரம் வடமராட்சி கிழக்கில் மயானத்திற்கு கொணடு சென்று படையினர் தாக்கியதாக இளைஞர் ஒருவர் யாழ்.போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


No comments