பருத்தித்துறையில் கொரோனா தொற்று மூதாட்டி மரணம்!பருத்தித்துறையில் மேலுமொரு கொரோனா மரணம் நிகழ்ந்துள்ளது.கொரோனா தொற்றுக்குள்ளான 75 மூதாட்டி, கோப்பாய் கொரோனா சிகிச்சை வைத்தியசாலையில் வைத்தியம் பெற்று நேற்று வீடு திரும்பிய நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து அவரது பூதவுடல் சுகாதாரப்பிரிவினரால் பாதுகாக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஏறாவூர் பொலிஸாரின் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பான விடயங்களை பேஸ்புக்கில் மோசமாக விமர்சித்தார் என்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த இந்தச் சந்தேகநபர், நேற்று (06) கைது செய்யப்பட்டு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர் செயயப்பட்டபோது, அவரை மார்ச் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சுகாதாரப் பிரிவினருடன் இணைந்து ஏறாவூர் பொலிஸார் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைளில் பாடசாலை ஒன்றில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகநபர் அந்நடவடிக்கையை பேஸ்புக் மூலம் மிக மோசமாக விமர்சித்து, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்தார் என்பதே சந்தேக நபர் மீதான குற்றச்சாட்டாகும்.


No comments